பிரிட்டனில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வரும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படவுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
பிரிட்டனில் இருக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பெரும்பாலானவை வரும் திங்கட்கிழமை அன்று செயல்பட தயார் நிலையில் உள்ளது. இதனால் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடு இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கிவிட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும் அரசு ஊரடங்கை எளிமையாக்க எச்சரிக்கைக்குரிய சில நடவடிக்கைகளை பின்பற்றி வருகிறது.
எனவே பொதுமக்களுக்கு அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வரும் திங்கட்கிழமை தான் தேசிய ஊரடங்கிலிருந்து வெளியேறும் திட்டத்திற்கான முதல் நிலையாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து மாணவர்கள் அனைவரும் மார்ச் 8 ஆம் தேதியில் இருந்து பள்ளி கல்லூரிகளுக்கு செல்லலாம்.
மேலும் கட்டாயமாக வருகைப்பதிவு பின்பற்றப்படும். எனவே அனைவரும் முக்கியமான காரணங்களை தவிர பிற காரணங்களுக்காக வகுப்புகளை நிராகரிக்க கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பிற்க்காக முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்திருக்கிறார்.
மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஏற்கனவே ஏறக்குறைய சுமார் 57 மில்லியன் கொரோனா பரிசோதனைக்கான கருவிகள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி செல்லும் முதல் இரு வாரங்களில் மூன்று முறை பரிசோதனை செய்யப்படும். அதன்பின்பு வீட்டிலேயே உபயோகிக்க ஒவ்வொரு வாரமும் இரண்டு சோதனைகள் அளிக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.