Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 2301 கன அடியாக உயர்ந்தது..!!

நீர் பிடிப்பு  பகுதிகளில் பெய்த மழையால் பவானி சாகர் அணையில்  நீர் வரத்து  2301 கன அடியாக உயர்ந்துள்ளது .

ஈரோடு  மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பவானி சாகர்  அணை  105  அடி உயரமும், 32.8  டி எம் சி கொள்ளளவும் கொண்டது .இதனால் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர்  ஆகிய  மாவட்டங்களில் உள்ள 2,47,000 ஏக்கர்   நிலங்கள்  பாசன  வசதி  பெறுகின்றன.இந்நிலையில் நீர்ப்பிடிப்பு  பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி  மற்றும் கேரளாவின்  ஒரு  சில  பகுதிகளிலும்  மழை  பெய்துவருவதால்  பவானிசாகர்  அணைக்கு  நீர்வரத்து  அதிகரித்து  உள்ளது.

இதன் காரணமாக பவானி சாகர் அணையில் நேற்று காலை 530  கன அடியாக இருந்த நிலையில் இன்று  2301 கன அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இன்று  காலை  8 மணி  நிலவரப்படி 58.88 அடியாகவும் 6.9 டிஎம்சி  யாகவும் அதிகரித்து உள்ளது. குடிநீர்  தேவைக்காக பவானி ஆற்றில் இருந்து  1000 கன அடி நீரும் கீழ்  பவானி  வாய்க்காலில் இருந்து குடிநீருக்காக 5 கன அடி நீரும் என  மொத்தம் 1005 கன அடி அணையில் இருந்து  தண்ணிர்  வெளியேற்றப்படுகிறது.

Categories

Tech |