Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் கட்டாயம் தடுப்பூசி போடணும்… தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்..!!

காஞ்சிபுரத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுவரும் அலுவலர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து நிலை பணியாளர்கள் வாக்குச்சாவடிகளில் பணிபுரிந்து வருகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. அதன்படி காஞ்சிபுரத்திலும் வாக்குச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி கட்டாயம் போட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

அந்த அறிவிப்பின்படி தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தேர்தல் மண்டல அலுவலர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆகியோர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இந்த தடுப்பூசி முகாம் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் தேர்தல் உதவியாளர் கலையரசன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் ரமேஷ்குமார், சீனிவாசன், நகர் நல அலுவலர் முத்து ஆகிய பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Categories

Tech |