Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இது என்ன புது டெக்னிக்கா இருக்கு…. நூதன முறையில் விழிப்புணர்வு…. அதிகாரிகளின் புதிய முயற்சி…!!

திருமண அழைப்பிதழ் போல் துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்ய தேர்தல் அதிகாரி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

தேர்தல் ஆணையம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்ய வேண்டுமென தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி அதிகாரிகள் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் பொது மக்களிடம் வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நிஷாந்த் கிருஷ்ணா ஐ.ஏ.எஸ் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மஹேந்திரன் போன்றோர் நூதன முறையில் திருமண அழைப்பிதழ் வடிவில் துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு அதனை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அந்த துண்டு பிரசுரங்களில் “வாக்களிக்க அழைப்பிதழ்” என தலைப்பிட்டு இருந்துள்ளது. இதனையடுத்து மணமக்கள் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும் வைபோகம் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் 6.4. 2021 அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அருகில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு சென்று தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனிமனித இடைவெளியை கடைபிடித்து சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து தவறாமல் தங்களது வாக்கினை செலுத்தும்படி அழைக்கின்றோம் என அதில் கூறப்பட்டுள்ளது. அதோடு இந்த அழைப்பிதழில் அன்பளிப்பு பெறுவதும், அளிப்பதும் பெரும் குற்றமாகும் என அச்சிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க வேண்டுமானால் 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |