தன் உயிரை காப்பாற்றிய விஜய் சேதுபதிக்கு, விஜே லோகேஷ் மாலை அணிவித்து நன்றி தெரிவித்தார்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் “நானும் ரவுடி தான்”. இத் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான விஜே.லோகேஷ்பாபு நடித்திருந்தார். அதன்பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வந்த அவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு திடீரென ஸ்டோக் ஏற்பட்டது.
அதில் அவரது இரண்டு கால் மற்றும் இரண்டு கை செயலிழந்தது. இதனால் அவரை நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பின் சிகிச்சைக்காக பலரிடம் உதவி கேட்டனர். அப்போது மருத்துவமனையில் லோகேஷை சந்தித்த விஜய் சேதுபதி சிகிச்சைக்கான மொத்த செலவையும் ஏற்றுக்கொண்டார். அதன்பின் சிகிச்சை முடிந்து பூரண உடல் நலம் பெற்றார் லோகேஷ்.
இந்நிலையில் லோகேஷ் தன் உயிரை காப்பாற்றிய நடிகர் விஜய் சேதுபதிக்கு நன்றி நன்றி தெரிவிப்பதற்காக அவருக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி உள்ளார். அப்போது லோகேஷ் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் சேர்ந்து கேக் வெட்டினர்.
விஜய் சேதுபதி கேக் வெட்டும் போது “நீண்ட ஆயுளோடும் நல்ல ஆரோக்கியத்தோடு நீ எல்லோரையும் சிரிக்க வைத்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று கூறினார். இந்த வீடியோ காட்சியை லோகேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.