Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

100% வாக்களிக்க வேண்டும்… கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்… சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தலைமை..!!

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிவகங்கையில் கல்லூரி மாணவ-மாணவிகள் ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற்றுள்ளது.

தமிழ்நாட்டின் வருகின்ற 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் 100% வாக்களிக்க வேண்டும் என்று பல்வேறு இடங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி விழிப்புணர்வு பலகையில் கையெழுத்திட்டுள்ளார். இதனையடுத்து மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் காரைக்குடி பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றுள்ளது. இந்த ஊர்வலமானது புதிய பேருந்து நிலையத்திலிருந்து துவங்கி 100 அடி சாலை, தேவர் சிலை வழியாக பெரியார் சாலை பகுதியில் நிறைவு பெற்றுள்ளது.

இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் வாக்களிப்பது நமது கடமை, அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இந்த ஊர்வலத்திற்கு மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா,உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அந்தோணிராஜ், திருநாவுக்கரசு, ஜெயந்தி உட்பட அரசு அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Categories

Tech |