Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! பாராட்டு கிட்டும்..! புரிந்துணர்வு ஏற்படும்..!!

மீனம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் அதிகமாக பேசுவதை குறைத்துக் கொள்வது சிறந்தது.

பேச்சை கட்டுப்படுத்தி விட்டால் உங்களுக்கு பாதி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். நீங்கள் உங்கள் சுய கௌரவத்தை பாதுகாப்பது அவசியமாகும். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியம் காட்டக்கூடாது. இன்று உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். முக்கிய செலவுக்காக உங்களுக்கு பணவரவு கிட்டும். நீங்கள் இன்று உங்கள் பிள்ளைகளை புரிந்துகொண்டு நடக்க வேண்டும். இன்று நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் கடும் வார்த்தையை காட்ட வேண்டாம். கோபம் இல்லாமல் நடப்பது சிறந்தது. இன்று நீங்கள் உங்கள் பிள்ளைகளின் கல்விக்காக சிறிது செலவு செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான பணிச்சுமை இன்று நிலவும். வேலையின் காரணமாக நீங்கள் சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ள முடியாத நிலை உள்ளது. நீங்கள் எதையும் தன்னம்பிக்கையுடன் செய்தால் வெற்றி கிடைக்கும். பணவரவை அதிகரிக்க நீங்கள் சில திட்டங்களை கொள்வீர்கள்.
மேலிடத்தின் கனிவான பார்வையால் உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். இன்று உங்கள் குடும்பத்தாரும் உங்களை புரிந்து கொண்டு நடப்பார்கள். இன்று உங்களுக்கு குடும்பத்தாரும் பக்கபலமாக இருப்பார்கள். இன்று உங்களுக்கு சக பணியாளர்களின் உதவி கிடைக்கும். இன்று நீங்கள் மற்றவர்களுக்காக எந்த ஒரு ஜாமீன் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். ரொம்ப நாட்கள் திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கைகூடும். கொஞ்சம் முயற்சி செய்தால் நீங்கள் மென்மேலும் முன்னேற முடியும். நீங்கள் இன்று உங்களால் எல்லாம் முடியும் என்று தன்னம்பிக்கையும் உறுதியுடனும் இருப்பது மிகவும் அவசியமாகும். கணவன் மனைவிக்கிடையே சிலசில வாக்குவாதங்களும் பிரச்சினைகளும் வரக்கூடும். தயவு செய்து ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொண்டு பேச பாருங்கள். அவசரம் காட்டி எந்த ஒரு வேலையிலும் ஈடுபட வேண்டாம். நீங்கள் பெரியவர்களுக்கு மதிப்பு கொடுங்கள். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். கொஞ்சம் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 5 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் நீலம் நிறம்.

Categories

Tech |