Categories
மாநில செய்திகள்

9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. ஒருநாள் விடுமுறை – வெளியான தகவல்…!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வந்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்கள் ஒரு வருடம் முழுவதுமாக வீட்டிலிருந்தே படிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இதையடுத்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பெற்றோர்களின் கருத்து கேட்புக்கு பிறகு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 9-11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எழுதாமலேயே ஆல்பாஸ் என்று  தமிழக அரசு எதிர்பாராத அறிவிப்பை அறிவித்தது. ஆனால் பன்னிரண்டாம் வகுப்புக்கு தேர்தல் முடிந்து மே 3ஆம் தேதி பொது தேர்வு நடைபெறும் என்றும் அட்டவணை வெளியிட்டுள்ளது.

இதையடுத்து ஆசிரியர்களின் தரப்பில் ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது 6 நாட்கள் பள்ளிகள் செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் 12 ஆம்வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. ஆனால் தேர்வுக்கு முன்பாக தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் மாணவர்களுக்கு பாட திட்டத்தை சீக்கிரம் முடிக்க வேண்டும். மேலும் ஆசிரியர்களுக்கு தேர்தல் தொடர்பாக பயிற்சி அளிக்கப் படுவதால் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். இதனால் மாணவர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க முடியவில்லை.

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்தல் பயிற்சி அளிக்கப்படுவதாக ஆசிரியர்களுக்கு ஒரு நாள் கூட விடுமுறை கிடைக்கவில்லை. இதனால்  பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாகவும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வேண்டும் என்றும் அதற்கு ஏற்ப ஒவ்வொரு சனிக்கிழமையும் விடுமுறை வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த முடிவை எடுத்து சனிக்கிழமை தோறும் தமிழக அரசு விடுமுறை அறிவித்தால் மாணவர்களுக்கு ஒரு நாள் விடுமுறை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |