சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவினர் திமுகவினர் ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டு மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கூட்டணி குறித்த குழப்பமும் தொகுதி பங்கீடு குறித்தும் இழுபறி நீட்டித்து வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.
இதையடுத்து இன்று சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரமாண்ட மேடையில் 117 பெண் வேட்பாளர்கள், 117 ஆண் வேட்பாளர்கள் என மொத்தம் 234 வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்து வைத்துளார். சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியானது கடந்த 2016 ஆம் வருடத்தில் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 1.08 % வாக்குகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது கடலூர் தொகுதியில் சீமான் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.