Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக … ஆர்ப்பாட்டதில் மார்க்சிஸ்ட் கட்சி…!!!

சிவகிரியில், டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் .

தென்காசி மாவட்டத்தில் ,சிவகிரியில் கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி மத்திய அரசின்மூன்று  வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆதரவாக சிவகிரியில் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினரான ஜெயராஜ் தலைமை தாங்கி  நடத்தினார் .

வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் நடராஜன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமசுப்பு, மருதையா, சுப்பையா, சுப்பிரமணியன் மற்றும் சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளரான  அமல்ராஜ், ஆட்டோ சங்க மாவட்ட துணைச் செயலாளரான  சக்திவேல், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் சக்திவேல் ஆகியோர்  கலந்து கொண்டார்கள் .

Categories

Tech |