Categories
சினிமா தமிழ் சினிமா

100 கோடிக்கு மேல் வசூல்… கொண்டாடும் “உப்பென்னா” படக்குழுவினர்…!!

விஜய் சேதுபதி நடித்த உப்பென்னா திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி தெலுங்கில் விஜய் சேதுபதி நடித்த “உப்பென்னா” வெளியானது.

இப்படம் வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த உப்பென்னா திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சந்தோஷத்தை  உப்பென்னா படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |