பெரம்பலூரில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக சில பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பேரளி துணைமின் நிலையம் உள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணி நாளை நடைபெறவிருக்கிறது. இதனால் பனங்கூர், அசூர், ஒதியம், பேரளி குறும்பாளையம், கீழப்புலியூர், சித்தளி, வாலிகண்டபுரம், கே.புதூர், செங்குணம், மருவத்தூர், பீல்வாடி, அருமடல், வாலிகண்டபுரம், கல்பாடி ஆகிய பகுதிகளில் மின்சாரம் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
இந்த பராமரிப்பு பணி நாளை காலை 9.45 மணி முதல் நடைபெறவிருப்பதால் பணி நிறைவடையும் வரை இந்தப் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு பகிர்மான கழகம் மற்றும் மின் உற்பத்தியின் பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்துச்செல்வன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.