Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசே! கேஸ் விலையை உயர்த்தி…. மக்கள் பணத்தை கொள்ளையடிக்காதே – மம்தா கண்டனம்…!!

நாடு முழுவதும் தற்போது விலைவாசி உயர்வின் காரணமாக மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல் போன்றவற்றின் விலையேற்றத்தால் சாமானிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சிலிண்டரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது எல்லா வீடுகளிலும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.  கொரோனா நெருக்கடி காலத்தில் எந்த ஒரு விலை ஏற்றமும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது விலைவாசி உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் பெட்ரோல் -டீசல் விலை மற்றும் சிலிண்டரின் விலைவாசி உயர்வை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவரிசையில் மம்தா பேசுகையில், “எல்பிஜி சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்துவதன் மூலம் பாஜக மக்களின் பணத்தை கொள்ளை அடித்து வருகிறது. இதனால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வரியை குறைப்பதற்கும் மக்களின் சுமையை குறைப்பதற்கும் மத்திய அரசு தயாராக இல்லை. இல்லத்தரசிகளுக்கு எதிரான இந்த போராட்டத்தை நடத்துவேன் என்றும் மத்திய அரசு உடனடியாக கேஸ் விலையை குறைக்க வேண்டும் எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |