கண்ணீர் துடைப்பதும் பெண்…!
கண்ணீர் விடுவதும் பெண்…!
கண் இமை போல காப்பதும் பெண்…!
கண்மணியே என்று கொஞ்சுவதும் பெண்…!
கனிவோடு உபசரிப்பதும் பெண்…!
கண்மூடித்தனமாய் நம்புவதும் பெண்..!
கணக்கு போட்டு வாழ்வதும் பெண்..!
ஆயிரம் வலிகள் இருந்தாலும் புன்னகைப்பவள் பெண்…!
வாழ்வில் சாதிக்க துடிப்பவளும் பெண்…!
சாதனை படைப்பவளும் பெண்…!
மங்கையாய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா…! என்ற பாரதியின் வரிகளுக்கு இணங்க மாதவம் செய்து பெண்ணாக பிறந்திருக்கும் அனைத்து பெண்மணிகளும் மகளிர் தின வாழ்த்துக்கள்…!