Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்றை சுத்தம் செய்ய… “வாரம் ஒரு முறை ஒரு ஸ்பூன் போதும்”…. தவறாமல் சாப்பிடுங்க..!!

வயிற்றை சுத்தப்படுத்த நாம் காய்ச்சிய ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தினால் பல நன்மைகள் உள்ளது. அது குறித்து தொகுப்பில் நாம் பார்ப்போம்.

ஆமணக்கு எண்ணெய் என்பது முன்னொரு காலத்தில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த எண்ணையை அதிக அளவில் பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது இந்த எண்ணெய் பயன்படுத்துவதே இல்லை. காய்ச்சிய ஆமணக்கு எண்ணெய் 3 முதல் 5 துளிகள் இரவு படுக்க போகும் முன்பு குடித்து வர மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். சிறு குழந்தைகளுக்கு இரண்டு துளி போதுமானது. இது பக்கவிளைவுகளற்ற பாதுகாப்பான எண்ணெய்.

இதனை காய்ச்சி எண்ணெயுடன் கால்பங்கு உடன்  கடுக்காய் பிஞ்சு பொடியை சேர்த்து நன்கு அரைத்து வாய்வு, மூலக்கடுப்பு, இரத்த மூலம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கப் போகும் முன்பு 5 மில்லி வரை கொடுத்து குடிக்கச் சொல்ல வேண்டும். அனைத்து மூல பிரச்சினைகளும் தீரும். பெண்களின் சுகப்பிரசவத்திற்கு இந்த எண்ணை மிகவும் உதவியாக உள்ளது. ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் அளவுக்கு இந்த எண்ணெயை ஊற்றி சாப்பிட வேண்டும். இந்த ஆமணக்கு எண்ணெய் வயிற்றில் உள்ள பூச்சிகளை சுத்தம் செய்ய பயன்படுகிறது.

இது உடனடியாக மலசிக்கலைத் தீர்த்து நம் வயிற்றில் இருக்கும் கிருமிகளை வெளியே தள்ளும். இந்த கலவையோடு அரை  ஸ்பூன் உப்பு சேர்க்கலாம். பாதி எலுமிச்சையும் இதனோடு சேர்த்தால் சளித்தொல்லை என்பது வரவே வராது. இதனை வாரம் ஒருமுறை குடித்து வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அனைத்தும் வெளியேறிவிடும். வயிற்றை சுத்தமாக இது மிகவும் உகந்தது. உடலில் ஏற்படும் காயங்களை குணப்படுத்தவும் இந்த ஆமணக்கு எண்ணெய் நல்லது. இந்த எண்ணெயை காயத்தில் தடவுவதன் மூலம் காயங்கள் விரைவில் குணமடையும். காயங்களால் உண்டாகாமல் இருக்க உதவும்.

Categories

Tech |