திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கி கொண்டு இருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்ததால், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்து இருக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதற்கு மாற்றாக மார்ச் 27ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் முக கவசம் அணிந்து திருவிழாவிற்கு செல்லும் படியும், பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் படியும் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.