கொரோனா தொற்று காரணமாக வேலை இழந்த டிரைவர் மின்கம்பத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கனகவள்ளிபுரம் கிராமத்தில் ஜேக்கப் ஜெயசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தனியார் டிராவல்ஸில் ஓட்டுநராக பணிபுரிந்த ஜெயசீலனுக்கு கொரோனா தொற்றால் வேலை இல்லாமல் போனது. இதனால் ஜேக்கப் தனது குடும்பத்தினருடன் கடம்பத்தூரில் இருக்கும் தனது உறவினர் வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.
இதனை அடுத்து குடும்பத்தை சரியாக நடத்த முடியாததால் மன உளைச்சலில் இருந்த ஜேக்கப் கடம்பத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் இருக்கும் மின் விளக்கு கம்பத்தில் தனது சால்வையால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் அவரை மீட்டு கடம்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.