உச்சநீதிமன்றத்தின் முக்கிய வழக்கின் தீர்ப்புகள் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் முக்கியமான வழக்குக்களின் தீர்ப்புகள் அசாமீஸ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மாநில மொழிகளிலும் வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மொழிகளின் தொன்மையான மொழி , செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் மொழி இடம்பெறாததற்கு தமிழக அரசியல் கண்டனம் தெரிவித்தனர். மேலும் தமிழிலும் தீர்ப்பை வெளியிட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இன்று தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற 113 வழக்குகளின் தீர்ப்புகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இணைய தளத்தில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மாநில மொழிகளில் தீர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. சமீபத்தில் வெளியாகிய சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் வழக்கு உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகள் தமிழில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.