Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.! – திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு.!

செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி, ஜல்லிக்கட்டு போராட்டம் ,  CA குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு எல்லாம் வழக்குகள் திரும்பப் பெறுவதாக முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். ஆனால் நீதிமன்றத்தால் செல்லாத…. நிரூபிக்க முடியாத வழக்குகள் மட்டுமே இந்த அரசு திரும்பப் பெற்று இருக்கிறது .பொய்யாக புனையப்பட்ட வழக்குகளை அரசு நீக்க மறுத்திருக்கிறது. அதிமுக  அரசானது ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. வழக்குகளை திரும்ப பெறவில்லை, இன்னும் நீதிமன்றத்திற்கு வெகு மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

இடிந்தகரை பகுதிகளில்  போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கான பாஸ்போர்ட் என்பது இதுவரை கொடுக்கப்படவில்லை. இப்படி முடக்கப்படுகின்றனர். அடக்குமுறையை அதிமுக அரசு எடப்பாடியார் செய்துகொண்டே இருக்கிறார். மறுபுறத்தில் நாங்கள் வழக்குகளை திரும்பப் பெறுகிறோம் என்று நாடகம் ஆடுகிறார். எடப்பாடி அரசு சொன்ன  வழக்குகள் திரும்பப் பெறுகிறோம் என்னும் நாடகத்தை நாங்கள் ஏற்க தயாராக இல்லை.

நாங்கள் இன்றும் கூட வழக்குகளை எதிர்கொண்டு இருக்கிறோம், நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம். வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்பது பொய்யான வாக்குறுதி என்பதை அம்பலப்படுத்தும் விதமாக மாநாடு நடக்க இருக்கிறது.  எடப்பாடி அரசு சொல்லியே கொடுத்த வாக்குகள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.

வழக்குகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக அரசு புறக்கணித்து இருக்கிறது. அவர்கள் கொடுத்த வாக்குகளை அவர்களை புறக்கணித்து இருக்கிறார்கள். தேசத்துரோக வழக்கு போன்ற சட்டங்கள் எல்லாம் போடுகிறார்கள். எதற்கு எடுத்தாலும் தேசத்துரோக வழக்கு,  அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கு என்று சொல்லி வழக்குகளை போடுகிறார்கள்.  சட்டம் அமைதி வழியில் ஒன்று கூடுவதை அனுமதித்திருக்கிறது. அமைதி வழியில் ஒன்று கூடி போராட்டம் நடத்துவதற்கு, கருத்துக்கள் தெரிவிப்பது என்பது சர்வதேச சட்டங்களில் இருக்கின்றன.

இந்தியாவினுடைய சட்டங்களும் அதை ஆதரிக்கின்றன. தமிழ்நாட்டில் நடந்த அனைத்து போராட்டமும் அமைதி வழியில் நடந்த போராட்டம். அறவழியில் நடந்த போராட்டங்கள் .எந்த இடத்தில் வன்முறை நடக்கவில்லை. அப்படியிருக்கும்போது எதற்காக இவ்வளவு தூரம் கொடுமையான சட்டங்களைப் போட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். எந்த ஆட்சியிலும் சரி எதிர் வரக்கூடிய வேறு ஒரு ஆட்சியாக இருந்தாலும் சரி, அந்த ஆட்சியாளர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

இதற்காக மாநாடு நடத்துகின்றோம். எளிய இயக்கங்களால், மக்கள் இயக்கங்களால் நடத்தப்படுகின்ற மாநாடு. பெரிய பண பலத்தோடு நடத்தப்படுகின்ற மாநாடு அல்ல. கடுமையான நெருக்கடிக்கு பிறகு அரசு அடக்குமுறைக்கு பிறகு நாடு ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே நீங்கள் எப்பொழுதும் போல எங்களுக்கு துணை நின்று இந்த மாநாட்டை கொண்டு சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

Categories

Tech |