பிரான்சின் ரபேல் போர் விமானங்களின் தயாரிப்பு நிறுவனமான Dassault நிறுவனத்தின் வாரிசு ஆலிவர் டசால்ட் செர்கே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
பிரான்சில் மிகவும் சக்திவாய்ந்த ரபேல் போர் விமானங்களின் தயாரிப்பு நிறுவனமான Dassault நிறுவனத்தின் வாரிசாக இருப்பவர் ஆலிவர் டசால்ட் செர்கே. 69 வயது நிரம்பிய ஆலிவர் ரபேல் போர் விமானங்களை கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். மேலும் பிரான்சின் மத்திய- வலது குடியரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆலிவர் இருந்தார் . இந்நிலையில் பிரான்சின் வடபகுதியில் உள்ள கலாவ் டோஸ் என்ற பகுதியில் ஆலிவர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ட்விட்டரில் ஆலிவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரங்கல் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “ஆலிவர் நாட்டிற்காக சேவையாற்றுபவர் . அந்த சேவையை அவர் ஒருநாளும் நிறுத்தியதே இல்லை. அவரது இந்த மரணம் நாட்டிற்கே பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று பதிவிட்டுள்ளார். உலகில் பணக்காரர் பட்டியலில் ஆலிவர் 361 இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.