Categories
டெக்னாலஜி பல்சுவை

“உலக எமோஜி தினம்” ஆப்பிளின் புதிய எமோஜிக்கள் …..!!!

உலக எமோஜி தினத்தை முன்னிட்டு ஆப்பிள் நிறுவனம் புதிய எமோஜிக்களை வெளியிட்டது.  

சர்வதேச எமோஜி தினத்தை முன்னிட்டு பிரபல ஆப்பிள் நிறுவனம் 60-க்கும் மேற்பட்ட புதிய எமோஜிக்களை யுனிகோட் 12.0 சார்ந்து அறிமுகப்படுத்தியது. இதற்கான அனுமதியை இந்தாண்டு தொடக்கத்திலேயே பெற்றது.

Image result for apple new emoji

உணவு, விலங்குகள், கைகள் கோர்த்தப்படி இருக்கும் எமோஜி ஜோடிக்கள், மற்றும் உறவுமுறையை குறிக்கும் வகையில் ஆண் பெண் ஜோடிக்கள்,புடவை, நீச்சல் உடை,புதிய உணவு வகைகள், விலங்குகள் போன்ற அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளன.

Image result for apple new emoji

இத்தகைய புதிய எமோஜிகளை தனது ஐ போன் சாதனங்களாக i phone,i pad, mac போன்றவற்றில் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

பயனாளர்கள்  தங்களின் மென்பொருளை அப்டேட் செய்தபின்  பயன்படுத்த தொடங்கலாம் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது

Categories

Tech |