நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், முஸ்லிம்கள் எந்த கட்சியில் இருந்தாலும் அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை பெற்று விடுகிறார்கள். இந்துக்களுக்கான பிரதிநிதித்துவம் என்பது இல்லாமல் போகக்கூடாது என்பதற்காகத்தான் 234 தொகுதியிலும் தேர்தல் பணிகளை நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம். தற்போது விருப்ப மனு பெற்றுள்ளோம். வருகின்ற 9ஆம் தேதி ஆன்லைன் மூலமாக வேட்பாளர்கள் நேர்காணல் நடத்தப்பட்டு, பத்தாம் தேதி இந்து மக்கள் கட்சியின் வேட்பாளர் அந்த பட்டியல் அறிவிக்கப்படும்.
அதற்கு முன்பாக இந்த கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்துக்களுக்கான அரசியல் அங்கீகாரத்தை அதிமுக – பிஜேபி கூட்டணி கொடுத்தாக வேண்டும், அவர்களுக்கும் கடமை இருக்கிறது, எனக்கும் உரிமை இருக்கிறது, அதனால் கேட்கிறேன். இந்துக்களுக்கு ஒரு அரசியல் அங்கீகாரம் வேண்டாமா ? அதற்காக கேட்போம்.
கமல் இந்து விரோதிகளின் கூட்டணி. கமலின் மக்கள் நீதி மையத்தோடு நக்ஸலைட்டுகளும், அர்பன் நக்ஸல்களும், தேச விரோதிகளும் கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். அவருக்கு பின்னாடி கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் நிறைய இருக்கிறது. அதனால் கமல்ஹாசனின் கொள்கை எங்களுக்கு உடன்பாடு இல்லை. நாங்கள் இந்துக்கள் பிரச்சனைகளை பேச வந்திருக்கிறோம் என தெரிவித்தார்.