தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஊதியம் வழங்கும் திட்டத்தை தன்னை பார்த்து திமுக காப்பி அடித்து விட்டதாக கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.
அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைத்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று திருச்சியில் நடந்த விடியலுக்கான உறக்கம் என்னும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் 7 உறுதிமொழி திட்டங்களை வெளியிட்டார். அதில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்ற திட்டத்தை அறிவித்தார். இதனையடுத்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 கொடுக்கும் திட்டத்தைதன்னை பார்த்து திமுக காப்பி அடித்து விட்டதாக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். என்னுடைய திட்டத்தை ஸ்டாலின் காப்பி அடித்து விட்டார். இல்லத்தரசிக்கு ஊக்கத்தொகை வழங்குவோம் என்று நாங்கள் தான் முதலில் கூறினோம். அதையே திமுக இப்போது கூறி இருக்கிறது என தெரிவித்துள்ளார்.