பிக்பாஸ் பிரபலம் ரியோவின் மகள் ரித்தியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது .
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ரியோ ராஜ். இவர் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரை சென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார் . இந்த நிகழ்ச்சிக்குப் பின் ரியோ தனது பிறந்தநாளை பிக்பாஸ் போட்டியாளர்களுடன் கோலாகலமாக கொண்டாடினார்.
இந்நிலையில் ரியோ தனது செல்ல மகள் ரித்தியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தில் பிக்பாஸ் பிரபலங்கள், விஜய் டிவி சீரியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.