Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பூர்வீக வீட்டை இழந்த விரக்தி… முதியவர் எடுத்த விபரீத முடிவு… சிவகங்கையில் சோகம்..!!

காரைக்குடியில் பூர்வீக வீட்டை இழந்த வருத்தத்தில் முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு அதே பகுதியில் 2-வது வீதியில் பூர்வீக வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டில் கோவிந்தராஜும் அவரது சகோதரர்களும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் அந்த வீட்டை அவர்கள் விற்றுள்ளனர். அந்த பூர்வீக வீட்டை கோவிந்தராஜ் வாங்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரால் அந்த வீட்டை வாங்க முடியவில்லை. பூர்வீக வீடு விற்கப்பட்டதையடுத்து கோவிந்தராஜ் அதே பகுதியில் 5-வது வடக்கு விரிவு பகுதியில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.

பூர்வீக வீடு விற்கப்பட்டதிலிருந்து கோவிந்தராஜ் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கோவிந்தராஜ் பூர்வீக வீடு உள்ள பகுதிக்கு சென்று பார்த்து வருத்தம் அடைந்துள்ளார். இதையடுத்து அவர் கொண்டுவந்த பெட்ரோலை ஊற்றி தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் கோவிந்தராஜை மீட்டு சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |