Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கர்நாடக சட்டசபையில் அமளி” மாலை வரை ஒத்திவைத்தார் சபாநாயகர்…!!

கர்நாடக சட்டசபையில் ஏற்பட்ட அமலியால் மாலை 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை கர்நாடக மாநில சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமென்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாநில முதலவர் குமாரசாமி நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது பேசினார். அதில் இந்த ஆட்சியை கலைக்க எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்திலேயே கடும் அமளி ஏற்பட்டது. இதைதொடர்ந்து பேசிய சபாநாயகர்  ரமேஷ் குமார்  கூறுகையில் ,

Image result for சபாநாயகர் ரமேஷ் குமார்

அதிருப்தி MLA_க்கள்  மீது காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் நடவடிக்கை எடுக்கலாம்.  காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் நடவடிக்கை எடுப்பதால் நான் தலையிட மாட்டேன். உச்சநீதிமன்ற தீர்ப்பை நான் மிகப்பெரிய அளவில் மதிக்கிறேன்.  அதிருப்தி MLA_க்கள்  சட்டசபைக்கு வந்து கையெழுத்து போடாவிட்டால்  எந்த சலுகையும் பெற முடியாது என்று சபாநாயகர்  எச்சரிக்கை விடுத்த்து கர்நாடக சட்டசபையை 3 மணி வரை ஒத்தி வைக்க உத்தரவிட்டார்.

Categories

Tech |