Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்… டிரைவரால் நடந்த விபரீதம்… 4 பேர் படுகாயம்..!!

இளையான்குடி அருகே டிரைவரின் கவனக்குறைவால் வேன் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சந்தனூர் கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வருக்கிறார். அந்த ஊரில் கருப்பண்ணசாமி கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலுக்கு மாசி திருவிழா நடைபெறவிருப்பதால் கருப்பையாவும், அந்த ஊர் மக்களும் ராமேஸ்வரம் சென்று தீர்த்தமாடி கோவில் திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்காக கருப்பையா மானாமதுரை அன்பு நகரில் வசித்து வரும் பாலகிருஷ்ணன் என்பவருடைய வாடகை வேனில் 27 பேருடன் சென்றுள்ளார். அப்போது கச்சாத்தநல்லூர் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது வேகத்தடைய கவனிக்காமல் இருந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் வேனுக்குள் இருந்த திருக்குமாரின் மனைவி கலையரசி, கருப்பையா, நாகவல்லி, திருச்செல்வி ஆகிய 4 பேரும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து இளையான்குடி காவல்துறையினர் வேன் டிரைவர் மீது கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டிய காரணத்திற்காக வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |