பிரபல இசையமைப்பாளர் திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு கூத்துப்பட்டறையில் சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
தமிழ் சினிமாவில் வெளியான நடுவுல “கொஞ்சம் பக்கத்த காணோம்”, “ஹலோ நான் பேய் பேசுகிறேன்”,”இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்தவர் சித்தார்த் விபின். இவர் இசை அமைப்பது மட்டுமின்றி “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்”, “வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க”, “காஷ்மோரா” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
அப்படங்கள் அனைத்திலும் இவர் ஒரு காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் புதுமுக இயக்குனர் புவன் இயக்கத்தில், யாஷிகா ஆனந்த் ஹீரோயினாக நடிக்கும் சல்பர் படத்தில் சித்தார்த் முதல்முறையாக வில்லனாக நடிக்க உள்ளார். இந்த வில்லன் கதாபாத்திரத்திற்காக அவர் கூத்துப் பட்டறையில் சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.