Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் முக்கிய கட்சி… அதிருப்தியில் அதிமுக… பரபரப்பு…!!!

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் நடிகர் கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். அவர் கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட திருவாடானை தொகுதியில் வெற்றி கண்டார். ஆனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தங்களுடைய கட்சிக்கு அதிமுக தாங்கள் கேட்ட தொகுதி ஒதுக்காததால், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அப்போது திமுக கூட்டணியில் அவர் இணைவார் என்று தகவல் வெளியான நிலையில், தற்போது திமுகவிற்கு ஆதரவு அளிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக ஆர் எஸ்.பாரதியிடம் முக்குலத்தோர் புலிப்படை இளைஞரணி செயலாளர் கடிதம் அளித்துள்ளார். ஏற்கனவே தேர்தலில் அதிமுக தோல்வி அடைவதற்கான வேலைகளை பார்ப்போம் என கருணாஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |