Categories
மாநில செய்திகள்

கருணாஸை தொடர்ந்து… தமிமுன் அன்சாரியும் திமுகவுக்கு ஆதரவு…. ஆட்டம் காணும் அதிமுக..!!

கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி தற்போது திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளது.

அதிமுக திமுக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை இறுதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் . இதற்கிடையே கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக இருந்த முக்குலத்தோர் புலிப்படை கட்சி அங்கிருந்து விளங்குவதாக அக்கட்சியின் தலைவர் கருணாஸ் அறிவித்திருந்தார். அதேபோல் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரியும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ளார்.

கருணாஸ் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் அன்சாரியின் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் திமுகவுக்கு எழுதிய கடிதத்தில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தங்கள் கட்சி திமுகவுக்கு ஆதரவாக இருக்கும். மேலும் தங்கள் கட்சிக்கு சென்ற முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற நாகப்பட்டினம் தொகுதியில் வாய்ப்பு இருந்தால் ஒதுக்கித் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் . மேலும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் சந்திக்க விரும்புவதாகவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Categories

Tech |