ஸ்விட்சர்லாந்தில் புர்கா அணிய தடைவிதித்த சட்டத்திற்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் புர்காவுக்கு தடை விதிக்கும் சட்டத்தை அறிமுகம் செய்வதற்காக எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 51.2% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஸ்விஸ் அரசாங்கம் தனது அரசியலமைப்பில் புர்கா மற்றும் முக மறைப்புகளை பொது இடங்களில் பயன்படுத்துவதை சட்டவிரோதமாக்குவதற்கான பிரிவை அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே இது போன்ற ஆடைகளை அணிய பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 5 ஐரோப்பிய நாடுகள் தடை விதித்திருந்த நிலையில் தற்போது சுவிட்சர்லாந்தும் இணைந்து கொள்ள போகிறது.
ஞாயிற்றுக்கிழமை வெளியான இறுதி முடிவில் 26 மண்டலங்களில் 6 இடங்கள் மட்டுமே இந்த முயற்சிக்கு நிராகரிப்பு தெரிவித்துள்ளது. நீதித்துறை அமைச்சர் கரின் கெல்லர் சட்டெர் சுவிட்சர்லாந்தில் குடியிருக்கும் 4,00,000 இஸ்லாமியர்களின் மிகச் சொற்ப எண்ணிக்கையிலான மக்களே இது போன்று முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிகின்றனர் என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த புர்கா தடைக்கான பொதுவாக்கெடுப்பு இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று கருதவில்லை என்பதாகவும் அவர் கூறியுள்ளார்.சுவிஸ் மக்களின் முன்முயற்சி 130 ஆண்டுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டதில் இதுவே 23 ஆவது முறையாகும் என்று கூறப்படுகிறது.