Categories
தேசிய செய்திகள்

“இதற்கெல்லாமா விவாகரத்து கேட்பாங்க”… இந்த காரணத்தைக் கூறி விவாகரத்து கேட்ட இளம்பெண்..!!

உத்தர பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் தனது கணவனுக்கு வழுக்கை உள்ளது என்பதைக் கூறி விவாகரத்து கேட்டன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது விவாகரத்து என்பது மிகவும் ஈஸியாக மாறிவிட்டது சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட விட்டுக்கொடுத்துப் போகாமல் எதற்கெடுத்தாலும் விவாகரத்து என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர் தம்பதியினர். கணவன் மனைவிக்கு இடையே பல காரணங்களினால் விவாகரத்து ஏற்படும். கணவன் மனைவி வீட்டு வேலை செய்யவில்லை, டீ கொடுக்கவில்லை,  என்று கூறி சண்டையிட்டு விவாகரத்து செய்வார்கள். அதை தவிர மனைவி கணவன் வீட்டிற்கு லேட்டாக வருகிறார், என்னை கவனித்துக் கொள்ள மாட்டார் என்று கூடி விவாகரத்து கேட்பார்கள்.

ஆனால் இங்கு ஒரு பெண் தனது கணவருக்கு திருமணத்துக்கு முன்பும் திருமணத்துக்கு பின்பும் தலையில் முடி இல்லை என்பதை மறைத்து வந்ததாக கூறி விவாகரத்து வாங்கி தருமாறு கூறியுள்ளார். வழக்கு தொடர்ந்த பெண்ணும் தனக்கு தன் கணவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  திருமணம் ஆனதாகவும் திருமணமாகி பல மாதங்கள் கழித்துதான் கணவரின் வழுக்கை குறித்து எனக்கு தெரியவந்தது என்று கூறி விவாகரத்து கேட்டுள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் ஆலோசனைக்குப் பிறகு அந்தப் பெண்ணிற்கு விவாகரத்து வழங்கப்பட்டது.

Categories

Tech |