ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பெண்ணும் தாயாகவும், மனைவியாகவும், மகளாகவும் நம்முடைய உறவின் அனைத்து பகுதிகளிலும் நிறைந்து காணப்படுகிறாள். பெண் இல்லையேல் இவ்வுலகில் மனித உயிர்கள் இல்லை. மேலும் ஒவ்வொரு கணவனின் வெற்றிக்குப் பின்னும், அண்ணனின் வெற்றிக்கு பின்னும் தந்தையின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்தவள் பெண் என்பதால் தான் ஒவ்வொரு நாடுகளுக்கும், நதிகளுக்கும், மலைகளுக்கும் பெண்கள் பெயர் வைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு பெண் பெண்கள் பெருமை வாய்ந்தவர்கள். பெண்கள் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
உடலளவில் ஆண்கள் வலிமையானவர்கள் என்றாலும் பெண்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை ஒவ்வொரு துறையிலும் கடுமையான போட்டியை கொடுத்து வருகிறார்கள். பெண்கள் என்றால் ஆசிரியர் அல்லது செவிலியராக தான் பணியாற்ற வேண்டும் என்ற நிலை மாறி தற்போது விமானம் ஓட்டுவது, ரயில் ஓடுவது, அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவது, இராணுவம், கப்பல் துறையில் வேலை பார்ப்பது என அனைத்து துறைகளிலும் பெண்கள் கால் பதித்து விட்டனர்.
இந்நிலையில் பெண்களைப் போற்றும் விதமாக இன்று பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
கண்ணீர் துடைப்பதும் பெண்…
கண்ணீர் விடுவதும் பெண்…
கண் இமைபோல் காப்பதும் பெண்…
கண்மணியே என்று கொஞ்சுவதும் பெண்…
கனிவோடு உபசரிப்பதில் பெண்… கண்மூடித்தனமாய் நம்புவதும் பெண்… கணக்குப் போட்டு வாழ்பவலும் பெண்…
சாதிக்கத் துடிக்கும் பெண்…
சாதனை படைத்தாலும் பெண்…
பெருமை மிகுந்த பெண்களுக்கு இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.