Categories
சினிமா தமிழ் சினிமா

மம்முட்டி படத்தில் இணையும் பார்வதி…. ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்…!!

மம்முட்டி படத்தில் பார்வதி நடிக்க ஒப்புக் கொண்டுள்ளது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குனர் சசி இயக்கத்தில் உருவான “பூ” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை பார்வதி. அதன்பின் இவர் மரியான், உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் தற்போது மம்முட்டி நடிக்கும் “புழு” படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சர்வதேச திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் நடிகை பார்வதி மம்முட்டி நடித்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அது அப்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பார்வதி தற்போது மம்முட்டியுடன் சேர்ந்து நடிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |