சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் தள்ளி வைக்கப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது “டாக்டர்” படத்தை நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா நடித்துள்ளார். மேலும் நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
டாக்டர் திரைப்படம் வரும் மார்ச் 26 ஆம் தேதியில் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் டாக்டர் திரைப்படம் தள்ளி வைக்க வாய்ப்புள்ளது என்று படக்குழு கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து தேர்தலுக்குப் பின் டாக்டர் படம் வெளியிடலாம் என்றும் ஆலோசித்து வருகிறது.