பிரிட்டனில் பேட்டியாளர்களை சந்தித்து பேசிய ஹரி மேகனின் பேட்டியை பார்ப்பதற்கு மகாராணியாருக்கு நேரம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஹரி மேகனின் பேட்டியை சர்க்கஸ் என அரண்மனை வட்டாரம் விமர்சித்த நிலையில் மகாராணியாருக்கு அதையெல்லாம் பார்ப்பதற்கு நேரம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் சில மணி நேரத்திற்கு முன்பு ஒளிபரப்பான அந்தப் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .பிரிட்டனில் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி இருந்தது. ஆனால் இந்த பேட்டி குறித்து மகாராணியார் அலட்சியம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது .
மகாராணியார் வேறு இரண்டு விஷயங்கள் மீது கவனம் செலுத்த வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது. 1. பள்ளிகள் எல்லாம் திறக்கப்படுகிறது .இதனால் தடுப்பூசி திட்டம் செலுத்துவதற்கான வேலையில் கவனம் செலுத்த வேண்டும். 2.மகாராணியின் கணவர் பிலிப்ஸ் மருத்துவமனையில் இருப்பதால் தனக்கு இந்த சர்க்கஸ் பேட்டியை பார்க்க நேரமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.