Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?… பலத்த கட்டுப்பாடுகள்… புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்தே மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் குருவனம் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு 500 ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இரண்டாவது அலைவீசும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, திருப்பூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா இரண்டாவது அலைவீசும் அபாயம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |