சில எண்ணில் இருந்து உங்களுக்கு குறுஞ்செய்தி வந்தால் அதை தயவு செய்து கிளிக் செய்யாதீர்கள் என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது.
ஒவ்வொரு நாளும் ஆன்லைன் மோசடி என்பது நடந்து கொண்டுதான் உள்ளது. மக்களை பலரை நம்ப வைத்து ஈசியாக ஏமாற்றி விடுகின்றனர். எத்தனை முறை சொன்னாலும் மக்களும் சில ஆஃபர்கள் என நம்பி தங்களது பணத்தை இழந்து விடுகின்றனர். பொதுவாக நெட் பேங்கிங் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையில் தான் அதிக அளவு மோசடிகள் நடந்து வருகின்றது. இதை பாதுகாக்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு ஒரு செய்தியை தெரிவித்துள்ளது.
சைபர் குற்றவாளிகள் எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண்ணுக்கு வெகுமதியாக புள்ளிகளை அனுப்புகின்றனர். அந்த வெகுமதி புள்ளிகளை சேகரிக்க முக்கிய தரவுகளை கேட்கின்றனர். அதை சில வாடிக்கையாளர்கள் தந்து விடுகின்றனர். அதனால் தங்கள் அக்கவுண்டில் உள்ள பணம் ஹேக் செய்யப்படுகின்றது. டெபிட் கார்டு எண், பின் நம்பர் , ஓடிபி, சி.வி.வி மற்றும் கடவுச்சொல் போன்ற முக்கியமான தரவுகளை யாருக்கும் கூறக்கூடாது என்று வங்கி தனது வாடிக்கையாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் வழியாக எந்த இணைப்பையும் கிளிக் செய்யாதீர்கள் என்று கூறியுள்ளது. தொலைபேசி மூலம் வாடிக்கையாளர் தகவல்களை கேட்கும் போது அதைக் கூற வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் எஸ்பிஐ வங்கி உங்களின் தகவல்களை ஒருபோதும் ஏற்காது என்றும் தெரிவித்துள்ளது. எனவே ஜாக்கிரதையாக இருங்கள் என்று எச்சரித்துள்ளது.
ஸ்டேட் வங்கியின் கூற்றுப்படி டெல்லி, மும்பை, ஹைதராபாத், சென்னை மற்றும் அதன் பகுதியை சேர்ந்த ஹேக்கர்கள் மின்னஞ்சலை அனுப்பி அதனை கிளிக் செய்வதன் மூலம் பயனாளர்களின் வங்கி தரவுகளை பெற்றுவிடுகிறார்கள். இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை இழந்து விடுகின்றனர். இதனால் நிதி இழப்பை சந்திக்க நேரிடும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.