Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள்

மீன் பிடிக்கு சென்ற மீனவர்கள்… வலையில் சிக்கிய பாட்டில்… பின் நேர்ந்த சோகம்..!!

நாகையில் மீனவர்கள் 3 பேர் மீன் வலையில் பிடிபட்ட பாட்டிலினுள் இருந்த திரவத்தை குடித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் பகுதியில் ஜான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக படகு ஒன்று உள்ளது. அந்த படகில் பாம்பன் பகுதியைச் சேர்ந்த அந்தோணி, செல்வேந்திரன், வினோத், தோமஸ், போஸ் ஆகிய ஆறு பேரும் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கோடியக்கரைக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். சென்ற 1-ம் தேதி மீன் பிடிப்பதற்காக கோடியக்கரைக்கு பெரிய படகில் சென்றுள்ளனர். சென்ற வெள்ளிக்கிழமை அன்று அவர்கள் கடலில் தங்கி மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது மீன் வலையில் பாட்டில் ஒன்று சிக்கியது. அந்த பாட்டில் மூன்று லிட்டர் கொள்ளளவு கொண்டது. அதில் ஒரு வகையான திரவம் இருந்துள்ளது. அதனை அவர்கள் எடுத்து படகில் வைத்துக் கொண்டு சென்றுள்ளனர். பின் அந்த திரவத்தை மது என நினைத்து வினோத், அந்தோணி, போஸ் ஆகிய 3 பேரும் குடித்துள்ளனர். இதையடுத்து மறுநாள் படகில் தூங்கிக்கொண்டிருந்த மூன்று பேரும் வெகு நேரமாகியும் எழும்பவில்லை.

இதனால் அவர்களுடன் சென்ற மற்ற மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில் அந்தோணி இறந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து மற்ற 2 பேரையும் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் நாகை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் போஸ், வினோத் ஆகிய இரண்டு பேரும் பரிதாபமாக இறந்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கடலோர காவல்துறையினர் வினோத், போஸ் ஆகிய இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னரே பாட்டிலில் இருந்தது சாராயமா? எந்த வகை திரவம்? என்பது தெரியவரும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Categories

Tech |