ஒடிசா மாநிலத்தில் தாய் வீட்டை விட்டு புறப்படும்போது மணமகள் அழுது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் சோனேபூர் மாவட்டத்திலுள்ள ஜிலுண்டா கிராமத்தில் வசித்து வரும் குப்தேஸ்வரி சாஹீ என்ற பெண்ணுக்கு பலங்கிர் மாவட்டத்தில் உள்ள டெட்டல்கான் கிராமத்தில் வசித்து வரும் பிசிகேசனுடன் கடந்த வாரம் வியாழக்கிழமை திருமணம் நடந்தது. அதனை தொடர்ந்து மணப்பெண்ணை மாமியார் வீட்டிற்கு அழைத்துச்செல்லும் சடங்குகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது தாய் தந்தையரை பிரிந்து செல்வதை நினைத்து நீண்ட நேரமாக மணப்பெண் குப்தேஸ்வரி அழுதுகொண்டிருந்த நிலை திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.
இந்நிலையில் உறவினர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து இருக்க முயன்ற போது அவருக்கு நினைவும் திரும்பவில்லை உடலில் எவ்வித அசைவும் ஏற்படவில்லை. ஆகையால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பார்த்த மருத்துவர் குப்தேஸ்வரி மன அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். மேலும் எதிர்பாராமல் திடீரென நிகழ்ந்த மணப்பெண்ணின் இறப்பு அப்பகுதியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.