Categories
சினிமா தமிழ் சினிமா

செம குத்தாட்டம் போட்ட ‘பரியேறும் பெருமாள்’ பட இயக்குனர்… தீயாய் பரவும் வீடியோ…!!!

பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது .

தமிழ் திரையுலகில் இயக்குனர் மாரி செல்வராஜ் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தை இயக்கி பிரபலமடைந்தவர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. தற்போது இவர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது . மேலும் இந்தப் படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்களும் இணையத்தை கலக்கி வருகிறது.

விரைவில் கர்ணன் படத்தின் டீசர் வெளியாகும் என நடிகர் தனுஷ் டுவிட்டரில் தெரிவித்திருந்தார் . இந்த டீசருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் உதவி இயக்குனராக பணிபுரிந்த சமயத்தில் நீயா-நானா நிகழ்ச்சியில் செம குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |