தமிழகத்தில் நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று அதிகரிதுள்ளதால் மக்கள் சற்று கவலை அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தான் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகின. அதில், தமிழகத்தில் மேலும் 569 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,56,246 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4 பலியான நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை12,525 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 510 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,39,648 ஆக அதிகரித்துள்ளது. அதில், இன்று தமிழகத்தில் இன்று மட்டும் 54,964 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 1,76,38,302 ஆக இருக்கின்றது. தமிழகத்தில் தற்போது வரை 4,073 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.