Categories
லைப் ஸ்டைல்

“மாதவிடாய் காலத்தில் எத்தனை முறை சானிட்டரி நாப்கின்களை மாற்ற வேண்டும் தெரியுமா”…? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

பெண்கள் மாதவிடாய் காலத்தில் சானிடரி நாப்கின்களை எத்தனை முறை மாற்ற வேண்டும் என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு எத்தனை மணி நேரத்திற்கு ஒருமுறை சானிட்டரி நாப்கின்களை மாற்றவேண்டும் என்பது தெரியவில்லை. அதிக நேரம் பயன்படுத்தினால் பல பிரச்சனைகள் நமக்கு வரும். பெண்கள் மாதவிடாய் காலங்களில் சமாளிக்க எப்பொழுதும் சுகாதார நாப்கின்களை பயன்படுத்துகின்றனர். மாதவிடாய் பல பொருள்கள்  இருந்தாலும் பெண்கள் பயன்படுத்துவது நாப்கின் தான்.

ஏனென்றால் இது ரிமூவ் செய்யும் முறையை சார்ந்து உள்ளது. பெரும்பாலான பெண்கள் நாப்கின்களை பாதுகாப்பு என்று நினைக்கின்றனர். ஆனால் அது நமக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. இதனால் ஒரு நாளைக்கு 3 முதல் 5 மணி நேரத்திற்குள் ஒரு சானிட்டரி நாப்கின்களை மாற்ற வேண்டும். மேலும் அந்தப் பகுதியை முடிந்த அளவு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிக ரத்தப்போக்கு காலங்களில் 3 முதல் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை நாப்கின்களை மாற்றுவது மிகவும் நல்லது.

எப்போதும் உலர்ந்த ஆடைகளை அணியுங்கள். ஈரமான ஆடைகள் உங்களுக்கு நோய் தொற்றை உண்டாக்கும். முடிந்தவரை கெமிக்கல் நிறைந்த சானிடரி நாப்கின் களுக்கு பதிலாக ஆர்கானிக் நாப்கின்களை பயன்படுத்துங்கள் . நீங்கள் நீண்ட நேரத்திற்கு ஒரே சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்தினால் உங்களுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டு ஒருவித நாற்றம் வீசும். ஒருநாளைக்கு இருமுறை இளம் சூடு நீரில் குளியுங்கள்.

Categories

Tech |