Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரயில்வே பயணிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி… ரயில்வே காவல்துறை ஆய்வாளர் தலைமை..!!

திண்டுக்கல்லில் ரயில்வே பயணிகளுக்கு கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் நாடகம் நடத்தி காட்டியுள்ளனர்.

வெளிமாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ரயில்வே காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் காவல்துறை ஆய்வாளர் ரஞ்சித் குமார் தலைமையில் திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் வைரஸ் பரவாமல் முன்னெச்சரிக்கையாக இருக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து காவல்துறையினர் செயல்முறை விளக்கம் அளித்துள்ளனர். கொரோனா குறித்து விழிப்புணர்வு நாடகமும் நடத்தியுள்ளனர்.

ரயிலில் பயணம் செய்பவர்கள் கிருமிநாசினிகள் மூலம் கைகளை சுத்தப்படுத்தாமல் இருப்பதாலும், முக கவசம் அணியாமல் இருப்பதாலும் ஏற்படும் தீமைகள் குறித்து காட்சிகளாக நடித்துக் காட்டியுள்ளனர். மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை ரயிலில் எடுத்து வருபவர்கள் பற்றியும், மது அருந்திவிட்டு ரயிலில் பயணிப்பவர்கள் குறித்தும், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் காட்சிகளாக நடித்துக் காட்டியுள்ளனர். இந்த நிகழ்ச்சி ரயிலில் பயணிக்கும் பயணிகளை மிகவும் கவர்ந்திழுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் மகேஸ்வரி, பால் தாமஸ் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |