Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னது லிஸ்ட்ல எங்க பேர் இல்லையா?…. அதிமுக அமைச்சர்கள் அதிர்ச்சி… பெரும் பரபரப்பு…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெறுமா என அதிமுக அமைச்சர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.

அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைத்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் வேட்பாளர் பட்டியலில் 50 சதவீத வேட்பாளர்கள் ஓபிஎஸ்-க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் தென்மாவட்டங்களில் கட்சி முன்னோடிகளை விட தனது ஆதரவாளர்களுக்கு ஓபிஎஸ் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இரண்டாவது பட்டியலிலும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இரண்டாவது பட்டியலில் தங்களது பெயர் இடம் பெறுமா என செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு மற்றும் உதயகுமார் ஆகிய அமைச்சர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Categories

Tech |