Categories
உலக செய்திகள்

பாராசூட் திறக்காததால்…. அந்தரத்தில் உயிருக்கு போராடிய நபர்…. பதற வைக்கும் வீடியோ…!!

ஸ்கை டைவிங் என்பது வெளிநாடுகளில் மிகவும் பிரபலமானது. ஸ்கை டைவிங் செய்ய வேண்டுமென்றால் பயிற்சியாளரின் உதவியோடு நன்கு பழகிய பிறகு தான் தனியாக ஸ்கை டைவிங் செய்ய முடியும். இது ஆபத்தான ஒன்று ஆனாலும் ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் தான் இந்த ஸ்கை டைவிங் செய்ய விரும்புகிறார்கள். இந்நிலையில் ஈரானைச் சேர்ந்த நபர் ஒருவர் ஸ்கை டைவிங் செய்வதற்காக உயரமான மலையில் இருந்து குதித்துள்ளார்.

அப்போது பாராசூட்டை திறக்க முயற்சி செய்த போது அவரால் திறக்க முடியவில்லை. அதனால் மலையில் இருந்து சிறிது நேரத்தில் உயிருக்கு போராடிய நிலையில் பறந்துள்ளார். அப்போது ஸ்கை டைவிங் பயிற்சியாளர் ஒருவர் வந்து அவருடைய பாராசூட்டை திறந்து காப்பாற்றியுள்ளார். இந்த காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Categories

Tech |