Categories
அரசியல் மாநில செய்திகள்

காங்..,- திமுக கூட்டணி தோல்வி அடையும் – கருத்து கணிப்பு முடிவு…!!

புதுச்சேரி மாநிலத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடையும் என்று கருத்து கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவினர் மற்றும் திமுகவினர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீட்டித்து வருகின்றது.

இதையடுத்து தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகிய இருவரும் சேர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். மேலும் புதுச்சேரியில் காங்கிரஸ் பெருன்பான்மையை இழந்தது. இந்நிலையில் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்று டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. ரங்கசாமி தலைமையிலான பாஜக அதிமுக கூட்டணி 18 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் என்றும், காங்கிரஸ் திமுக கூட்டணி 12 இடங்களில் ஆட்சியை கைப்பற்றும் என்றும் கருத்துக் கணிப்பில் வெளியாகியுள்ளது.

Categories

Tech |