திருவள்ளூர் மாவட்டம் மங்களமேடு கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் கார்த்திக்- பிரியங்கா. இந்நிலையில் பிரியங்காவிற்கு ராஜ்குமார் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிரியங்காவிற்கும் அவருடைய கணவருக்கும் ஏற்பட்ட சண்டையின் காரணமாக தன்னுடைய தோழி வீட்டிற்கு செல்வதாக பிரியங்கா சென்றுவிட்டார். ஆனால் பிரியங்கா அங்கு தனது கள்ளக்காதலன் ராஜ்குமார் உடன் குடித்தனம் நடத்தி வந்துள்ளார். இதையடுத்து அங்கு வேறொரு நபருடன் பிரியங்காவிற்கு தொடர்பு ஏற்பட்டதை அறிந்த ராஜ்குமார் பிரியங்காவை கண்டித்துள்ளார். இதனால் கோபித்துக் கொண்ட பிரியங்கா தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதையடுத்து ராஜ்குமார் பிரியங்காவை சமாதானப்படுத்தி அழைத்து வந்துள்ளார். பின்னர் பிரியங்காவிற்கும், ராஜ்குமாருக்கும் ஏற்பட்ட சண்டையின் காரணமாக கோபமடைந்த ராஜ்குமார் பிரியங்காவிற்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து வாயில் ஊற்றியுள்ளார். இதையடுத்து ராஜ்குமார் பிரியங்காவின் தோழிக்கு போன் செய்து பிரியங்கா விஷம் குடித்து விட்டதாக கூறி வரவழைத்துள்ளார். ஆனால் அதற்குள் பிரியங்கா உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் மீது சந்தேகம் அடைந்த தோழி சந்தேகம் போலீசில் புகார் அளிக்க இறுதியில் உண்மை வெளிச்சத்துக்கு வந்து ராஜ்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.