பிரிட்டன் இளவரசர் ஹரி மனைவியான மேகன் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பல அதிர வைக்கும் தகவல்களில் ஒன்றாக தற்கொலை செய்ய முடிவெடுத்ததாக கூறியுள்ளார்.
பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் அமெரிக்கா தொலைக்காட்சியான ஒபேரா வின்பிரேவில் பேட்டி அளித்தனர். அந்தப் பேட்டி சில மணி நேரத்திலேயே அமெரிக்க தொலைக்காட்சியில் வெளியானது. அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை அவர் வெளியிட்ட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதில் ஒன்றாக மேகன் வாழ விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்ய முடிவு எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
ஒருவேளை இந்த விஷயத்தை கணவர் ஹரியிடம் சொல்லாமல் இருந்திருந்தால் தற்கொலை செய்து இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தான் மன உளைச்சலில் இருந்ததால் ஹரி மருத்துவ ஆலோசனைக்காக மருத்துவர்களை தேட முயன்றுள்ளார். ஆனால் ராஜ குடும்பத்தின் மீது ஏற்பட தாக்கத்தால் ஹரியின் முயற்சி அரண்மனை அலுவலர்களால் நிராகரிக்கப்பட்டதாக கூறியுள்ளார். மொத்தத்தில் தான் கென்சிங்டன் அரண்மனையில் ஜெயில் கைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதாக மேகன் உருக்கமாக கூறியுள்ளார்.