Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஆட்சியமைக்க போவது யார்?…. பரபரப்பு கருத்து கணிப்பு….!!!

தமிழகத்தில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.

அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைத்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என Times Now செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. திமுக கூட்டணி 158, அதிமுக கூட்டணி 65 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாகவும், மக்கள் நீதி மையம் 5, அமமுக 3, இதர கட்சிகள் மூன்று இடங்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |